பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பின்படி வருகிற 10-ம் தேதி (திங்கட்கிழமை) தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறப்பை முன்னிட்டும், வார இறுதி நாட்களை கருத்தில் கொண்டும் சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பாக
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வருகிற 10-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனால் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து மக்கள் சென்னை திரும்புவதற்கு ஏற்ப 9-ம் தேதி 705 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல், பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல, வார இறுதி நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களை கருத்தில் கொண்டு 8, 9 (சனி, ஞாயிறு) தேதிகளில் சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஜூன் 7, 8 தேதிகளில் 1,105 பேருந்துகளும், சென்னை, கோயம்பேட்டிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 160 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 200 சிறப்புப் பேருந்துகளும் என மொத்தமாக 1,465 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பேருந்துகளை www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி மூலமாக முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
1
of 872
Comments are closed.