Rock Fort Times
Online News

திருச்சி எம்பி தொகுதியில் அரசு அலுவலர்கள் செலுத்திய தபால் வாக்குகளில் 879 செல்லாதவை- அரசியல் கட்சியினர் அதிர்ச்சி…!

தமிழகத்திலுள்ள  39  நாடாளுமன்ற தொகுதிகளில்  கடந்த ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையாற்றினர்.  தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அரசு அலுவலர்கள், போலீசார், தாங்கள் பணிபுரியும் இடங்களிலேயே தபால் வாக்கு பதிவு செய்தனர்.  அந்தவகையில்  திருச்சி தொகுதியில் மாற்றுத்திறனா ளிகள், மூத்த குடிமக்கள், தேர்தல் பணியில் ஈடுபட்ட போலீசார், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ராணுவத்தினர் என  8,665 பேர் தபால் வாக்கு செலுத்தியிருந்தனர். இந்த தபால் ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன.  இதில், அதிகபட்சமாக மதிமுக வேட்பாளர் துரை வைகோ 3,336 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்கு 1674 வாக்குகளும், அமமுக வேட்பாளர் செந்தில்நாதனுக்கு
1186 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜேஷூக்கு 706 வாக்குகளும் கிடைத்தன.  நோட்டாவுக்கு 289 வாக்குகள் பதிவாகி இருந்தன.  உரிய முறையில் விண்ணப்ப படிவங்கள் நிரப்பாத, ஓட்டுகள் அளிக்காதவை என 879 ஓட்டுகள் செல்லாத ஓட்டுகளாக அறிவிக்கப்பட்டன.  ஒரு சராசரி மனிதன் கூட வாக்குச்சாவடிக்கு சென்று சரியாக வாக்களித்து தங்களது ஜனநாயக கடமை ஆற்றியுள்ளனர். ஆனால், அரசு துறையில் பணியாற்றும் அலுவலர்கள் 879 வாக்குகளை செல்லாத வாக்குகளாக பதிவு செய்திருப்பது  அரசியல் கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சியில் "திக்... திக்... நிமிடங்கள்” - பாதுகாப்பாக தரையிறங்கிய விமானம்!

1 of 874

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்