திமுக முதன்மை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு இல்ல திருமண வரவேற்பு விழா…* திருச்சியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது..!
திமுக முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரர் என்.ரவிச்சந்திரன் – சங்கரி ரவிச்சந்திரன் ஆகியோரின் புதல்வர் விஷால் நாராயணன் – பெங்களூரு ஜெகதீஷ் பாட்டில் – அனுபமா ஜெகதீஷ் பாட்டில் ஆகியோரின் புதல்வி ரிஷா பாட்டில் ஆகியோரின் திருமணம் சென்னை நீலாங்கரை கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் அண்மையில்
நடைபெற்றது. திருமணத்தை திமுக தலைவரும், முன்னாள்
முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். இந்நிலையில் மணமக்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி திருச்சி கேர் கல்லூரியில் நடைபெற்றது. இதில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் திமுக முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மூர்த்தி, பெரிய கருப்பன், மெய்ய நாதன், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், பொருளாளர் துரைராஜ் உட்பட கழக நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், உற்றார்- உறவினர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள் என ஏராளமானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் என்.ரவிச்சந்திரன் மற்றும் மணமகன், மணமகள் வீட்டார் இணைந்து செய்திருந்தனர்.

Comments are closed.