Rock Fort Times
Online News

த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு மறைவு: தமிழக ஆளுநர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்…!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை, கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வி.எஸ்.பாபு. இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக தலைவரும், முன்னாள் முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலினை சுமார் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், சென்னையில் உள்ள எம்.ஜி.எம். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 70 நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று(19-11-2026) உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழக ஆளுநர் அர்லேகர், முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழக ஆளுநர்,

தமிழக ஆளுநர் அர்லேகர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி.எஸ். பாபு மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த வேதனையும் துயரமும் அடைந்தேன்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மு. க. ஸ்டாலின்,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி,

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இரங்கல் பதிவில், “கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்

பிரேமலதா விஜயகாந்த்,

தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள பதிவில், சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு மறைந்த செய்தி அறிந்து மிகவும் துயறுற்றேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், அவரது கட்சியினருக்கு தேமுதிக சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

அண்ணாமலை,

அண்ணாமலை வெளியிட்ட இரங்கல் செய்தியில், கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தவெக கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்