திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை மற்றும் பொது தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு நீர் ஏற்றும் நிலையங்களில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் நாளை( 21.11.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக, மேற்கண்ட நீரேற்று நிலையங்களின் செயல்பாடு பாதிக்கப்படுவதால், திருச்சி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்றுவது தடைப்படும். இதனால் மத்திய சிறைச்சாலை, சுந்தரராஜ நகர், ஜே.கே.நகர், செம்பட்டு, காஜாமலை, ரெங்கா நகர், கிராப்பட்டி, அன்பு நகர், எடமலைப்பட்டி புதூர், பஞ்சப்பூர், அம்மன் நகர், மலையப்ப நகர், ரயில் நகர், பொன்மலை முன்னாள் ராணுவத்தினர் காலனி, பொன்னேரிபுரம், அம்பேத்கர் நகர், விவேகானந்த நகர், கே.சாத்தனூர், ஆனந்த நகர், கே.கே.நகர், அம்மா மண்டபம், பெரியார் நகர், திருவானைக்காவல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வருகிற 22.11.2026 அன்று ஒரு நாள் குடிநீர் விநியோகம் இருக்காது. 23.11.2026 வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு அளித்திடுமாறு ஆணையர் நே.பொன்மணி கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed.