வி.எஸ் பாபு மறைவு: 7 நாட்களுக்கு கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து… த.வெ.க. பொதுச்செயலாளர் அமைச்சர் என்.ஆனந்த் அறிவிப்பு!
சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று(19-11-2026) காலமானார். அவரது மறைவிற்கு தமிழக ஆளுநர் அர்லேகர், முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அண்ணாமலை
உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இதனையடுத்து, இன்று முதல் 7 நாட்களுக்கு கழகத்தின் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த 7 நாட்களுக்கும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, கழகக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பதை முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஒப்புதலோடு தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.