இம்மாதம் ஆகஸ்ட் வார விடுமுறை நாட்களை தவிர்த்து ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், 26 மிலாடி நபி என இரண்டு விடுமுறை நாட்கள் வந்தது. அதேபோல செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தின் முதல் வாரத்திலேயே தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்க உள்ளதால் மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அந்த வகையில் செப்டம்பர் 4 ம் தேதி வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தியையொட்டி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்து சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்கள் ஆகும். இதனால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்க உள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தொடர் விடுமுறை கிடைப்பதால் அவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதேபோல் அரசு ஊழியர்களும் இந்த விடுமுறையை பயன்படுத்தி சொந்த ஊர்களுக்குச் செல்லவும், குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடவும் திட்டமிட்டு வருகின்றனர்.
*

Comments are closed.