கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக திருச்சியில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு மெமு ரயில் இயக்கப்படுகிறது. வார விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக திருச்சியில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு மெமு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, இந்த சிறப்பு ரயிலானது(எண் : 06008) இன்று(15-09-2024) இரவு 11 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு கும்பகோணம், சிதம்பரம், விழுப்புரம் வழியாக நாளை (திங்கட்கிழமை) காலை 6.05 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மேற்கண்ட தகவல் திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.