Rock Fort Times
Online News

கல்குவாரி முறைகேடு: திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் போலீசார் திடீர் சோதனை…!

மதுரை பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் பகுதிகளில் கிரஷர், செம்மண் மற்றும் கல் குவாரிகளில் விதிகளை மீறி அதிகளவிற்கு செம்மண் மற்றும் சரளைக் கற்களை வெட்டி எடுத்துள்ளதாகவும், இதன் மூலம் அரசுக்கு முறையே ரூ.2.32 கோடி மற்றும் ரூ.3.07 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மதுரை மாவட்ட மத்திய குற்ற பிரிவு காவல் துறையினர் இரு வழக்குகள் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பான மதுரை அய்யர் பங்களா, எழில் நகர், ரோஜா வீதியில் உள்ள முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் சட்டவிரோத குவாரி தொடர்பாக ஆவணங்கள் மற்றும் பொருட்கள் உள்ளதா என்பது குறித்து மதுரை மாவட்ட துணை கண்காணிப்பாளர் பொன்னரசு தலைமையில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனை நடைபெற்று வரும் முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டின் முன்பாக காவல்துறையினர்
குவிக்கப்பட்டுள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்