Rock Fort Times
Online News

திருச்சியில் உணவக உரிமையாளரை மிரட்டிய 2 ரவுடிகளை மடக்கிப்பிடித்த போலீசார்…!

திருச்சி வடக்கு ஆண்டாள் தெரு பகுதியை சேர்ந்தவர் அமல்ராஜ் (வயது 35). இவர் சிந்தாமணி கல்யாணராமன் கோவில் தெரு பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு வந்த இரண்டு வாலிபர்கள் கத்திய காட்டி மிரட்டி அவரிடம் இருந்து பணத்தை பறிக்க முயற்சி செய்தனர்.
இதுகுறித்த தகவலின்பேரில் கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்கள் 2 பேரையும் மடக்கிப் பிடித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள் திருச்சி மேல சிந்தாமணி பகுதியை சேர்ந்த சிவகுரு (23), சூர்யா (20) என்பதும் இருவரும் ரவுடி பட்டியலில் உள்ளதும் தெரிய வந்தது. இது தொடர்பாக கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். இந்நிலையில் சிவகுருவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ள்ளார்.

🔴: ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம் 6-ம் திருநாள்

1 of 850

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்