திருச்சியில் பிடிபட்ட லாட்டரி மாஃபியா தலைவன் வக்கீல் முகமது மீரான்… புகைப்படத்தை போலீசார் மறைத்த காரணம் என்ன?
திருச்சி மண்டல தனிப்படை போலீசாரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ள லாட்டரி மெகா மாஃபியா கும்பல் தலைவன் மாப்பிள்ளை மீரான் பற்றி உளவு பிரிவு போலீசார் உள்ளிட்ட யாருக்குமே தெரியாதாம். மிக நுட்பமான மறைமுக லாட்டரி நெர்வொர்க்கை மீரான் நடத்தி வந்துள்ளான். திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி, டி.ஐ.ஜி மற்றும் மாவட்ட எஸ்.பி ஆகிய காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவால் மட்டுமே இவனை தற்போது கைது செய்ய முடிந்துள்ளது. இல்லையென்றால் கைது செய்ய முடிந்திருக்காது. சிங்கம் படத்தில் அண்டர்க்ரவுண்ட் ட்ரக் மாஃபியாவாக காட்டப்படும் “டேனி” போல, லாட்டரி நெட்வொர்க்கின் டேனிதான் இந்த மாப்பிள்ளை மீரான். இப்படி காவல்துறை உயரதிகாரிகள் உத்தரவால் கைது செய்யப்பட்ட பிறகும் கூட முக்கிய குற்றவாளியான இவனை மக்கள் மத்தியில் அடையாளம் காட்டாதவாறு இவனது முகத்தை மட்டும் மறைத்துக் கொண்டிருக்கும் போட்டோவை சோமரசம்பேட்டை போலீசார் வெளியிட்டுள்ளனர். இது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

போலீசார் வெளியிட்டுள்ள புகைபடத்தில் வக்கீல் மாப்பிள்ளை மீரான் (அம்புகுறியிட்டு காட்டப்பட்டவர்) முகத்தை மூடியபடி இருக்கும் காட்சி.

Comments are closed.