Rock Fort Times
Online News

ரேஷன் கடைகளில் தரம் உயர்த்தப்பட்ட சன்ன ரக அரிசி விநியோகம்…* அமைச்சர் வெங்கடரமணன் தகவல்!

தமிழகத்தில் சன்ன ரக அரிசி விலை கிலோ ரூ.90 வரை உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் இவ்வளவு விலை கொடுத்து வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, ரேஷன் கடைகளில் சன்ன ரக அரிசி கிலோ ரூபாய் 30க்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதோடு அதற்கான திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால், ரேஷன் கடைகளில் தரம் உயர்த்தப்பட்ட சன்ன ரக அரிசி தரம் குறைவாகவும், ரேஷன் அரிசி
போலவே இருப்பதாகவும் பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் குறித்து புகார்கள் வந்தால், உரிய ஆய்வு மேற்கொண்டு, தேவைப்பட்டால் வேறு இடத்தில் இருந்து தரமான அரிசி கொண்டு வரப்பட்டு மாற்றி வழங்கப்படும். மேலும், அரிசியின் தரம் முறையாக ஆய்வு செய்யப்பட்ட பின்னரே பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள நெல்லைப் பாதுகாப்பதற்காக புதிய சேமிப்புக் கிடங்குகள் திறக்கப்பட்டு வருகின்றன. சன்ன ரக நெல்லுக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2,750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரேஷன் அரிசியின் தரத்தை மேம்படுத்துதல், நெல் சேமிப்பைப் பாதுகாத்தல் மற்றும் விவசாயிகளுக்கு உரிய கொள்முதல் விலை வழங்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்