திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வடக்கு அயித்தாம்பட்டியை சேர்ந்தவர் சிலம்பரசன் (36). இவரது மனைவி கலா(26). விவசாயியான சிலம்பரசன் சம்பவத்தன்று முசிறி- துறையூர் சாலையில் ஏற்பட்ட விபத்தில் பலியானார். சமீபத்தில் இவர்களது 9 மாத ஆண் குழந்தை உடல் நலக்குறைவு காரணமாக இறந்து போனது. கணவன், மகன் அடுத்தடுத்து உயிரிழந்ததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த கலா, அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த முசிறி காவல்துறையினர் கலாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.