Rock Fort Times
Online News

திருச்சி விமான நிலையத்தில் ரூ.2.26 கோடி மதிப்பிலான தங்கச் சங்கிலிகள் பறிமுதல்…* தம்பதியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை!

மலேசியாவில் இருந்து தனியார் விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.அப்போது ஒரு தம்பதி தங்களது உடைமைகளில் மறைத்து 1,600 கிலோ கிராம் தங்கச் சங்கிலி களை கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தி வரப்பட்ட தங்கச் சங்கிலிகளின் இந்திய மதிப்பு ரூ.2.26 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டது . அந்த தங்கச் சங்கிலிகளை கடத்தி வந்ததன் நோக்கம் என்ன? யாரிடம் கொடுப்பதற்காக கடத்தி வந்தார்கள் என அந்த தம்பதியிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்