Rock Fort Times
Online News

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை, வெள்ள தடுப்பு பணிகளை மேயர் மு அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு…!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.  திருச்சியிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பொதுமக்கள் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படாமல் தடுப்பதற்காக திருச்சி மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல மழை, வெள்ள தடுப்பு பணிகளும் தீவிர படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் இன்று(அக்டோபர் 22) பொறியாளர்களுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வெள்ளத் தடுப்பு பணிகள் குறித்து மேயர் அன்பழகன் கூறுகையில், திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளிலும் மழை, வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊழியர்கள் மற்றும் உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன என்று தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்