Rock Fort Times
Online News

திருச்சி கிழக்கு மாநகர திமுக சார்பில் தெருமுனை கூட்டம்…

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகர திமுக சார்பில் காட்டூர் பகுதியில் 45, 45-ஏ வட்ட தி.மு.க சார்பாக தெருமுனை கூட்டம் நடைபெற்றது. பொன்மலை பகுதி கழகச் செயலாளர் கொட்டப்பட்டு இ.எம்.தர்மராஜ் வரவேற்று பேசினார். வட்டச் செயலாளர்கள் முருகானந்தம், தமிழ்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி கிழக்கு மாநகரக் கழகச் செயலாளரும், மாநகராட்சி மண்டல குழு 3ன் தலைவருமான மு.மதிவாணன், தலைமைக் கழக பேச்சாளர் ஈரோடு இறைவன்ஆகியோர் சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில் மாநகர துணை செயலாளர்கள் செல்லையா , நூர்கான், மாமன்ற உறுப்பினர் ரமேஷ், அணி நிர்வாகிகள் பன்னீர்செல்வம், செந்தில், தலைமைக் கழக பேச்சாளர்கள் ஏர்போர்ட் பொன்னுச்சாமி, கோவிந்தன் மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாமன்ற உறுப்பினர் சீதாலட்சுமி நன்றி கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்