Rock Fort Times
Online News

வீட்டுக்குள் புகுந்த பாம்பின் உடலில் சிக்கிக்கொண்ட தங்க மோதிரம்…!

கேரளம் மாநிலம், காசர்கோடு மாவட்டத்தின் அடூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பாம்பு ஒன்று புகுந்தது. அந்த பாம்பானது வீட்டில் இருந்த மேசையின் மீது ஊர்ந்து செல்லும்போது, அந்த மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த தங்க மோதிரம் பாம்பின் உடலில் சிக்கிக்கொண்டது. இதனால் பதறிப்போன வீட்டின் உரிமையாளர், இதுகுறித்து வனத்துறையினருக்குத் தகவல் அளித்தார். அதன்பேரில், வனத்துறையினர் அந்த பாம்பைப் பிடித்து, தங்க மோதிரத்தை மீட்டனர். பின்பு, வனத்துறையினர் அந்த பாம்பை பாதுகாப்பாக கொண்டு சென்று வனப்பகுதியில் விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்