தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 23ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இதில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். அதேபோல, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள், காவல்துறையினர் தங்களது தபால் வாக்குகளை செலுத்தினர். இந்நிலையில் திருச்சி, கலையரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்தில் தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களில் பதிவான தபால் வாக்குகளை பிரித்து அந்தந்த மாவட்டங்களுக்கு வழங்கிடும் பணி இன்று(ஏப்.28) நடந்தது. இந்த பணியினை கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி அ.சிவஞானம், திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான வே.சரவணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்தப் பணியின் போது அனைத்து மாவட்டத்திலிருந்தும் தபால் வாக்குகளை கவனிக்கும் பொறுப்பு அலுவலர்கள், வேட்பாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments are closed.