Rock Fort Times
Online News

பாலக்காடு – திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்…!

கரூர் -திருச்சி வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக சில ரெயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பாலக்காடு டவுனில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட வேண்டிய பாலக்காடு டவுன் -திருச்சி சந்திப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16844) வருகிற 1, 2, 4, 5 ஆகிய தேதிகளில் குளித்தலையில் நிறுத்தப்படும். இதேபோல, திருச்சி சந்திப்பில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட வேண்டிய திருச்சி சந்திப்பு -பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16843) 1-ந்தேதி எலமனூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும். அதேபோல திருச்சி சந்திப்பில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட வேண்டிய திருச்சி சந்திப்பு- பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16843) 2, 4 மற்றும் 5-ந்தேதிகளில் முத்தரசநல்லூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்