திருச்சி சீராதோப்பு ஏகிரிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ரஜினி (வயது 43). இவர் திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் இயங்கி வந்த ஒரு சீட்டு கம்பெனியில் கலெக்சன் ஏஜெண்டாக பணியாற்றி வந்தார். இவர், தனது கம்பெனி மீதுள்ள நம்பிக்கையில் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் சீட்டு பிடித்து பணம் வசூலித்து கொடுத்து வந்தார். இந்தநிலையில், சீட்டு கம்பெனி உரிமையாளர் மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ரஜினியிடம் சீட்டு பணம் செலுத்தியவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கினர். இதனால் செய்வதறியாமல் திகைத்த ரஜினி, சில தினங்களுக்கு முன்பு விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது தாயார் தமிழரசி ஜீயபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்த ரஜினிக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.