Rock Fort Times
Online News

முதல் கோணல் முற்றிலும் கோணல், முதல்வர் விஜய் தலைமையில் த.வெ.க.வில் இணையும் திட்டம் ஃபெயிலியர்…! தவெக இளைஞர் படையிடம் சி.விஜயபாஸ்கர் தாக்கு பிடிப்பாரா?

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரை சேர்ந்தவர் சி.விஜயபாஸ்கர். எம்பிபிஎஸ் முடித்த இவர், அதிமுக மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக தனது 25 வயதில், படிக்கின்ற காலத்திலேயே அரசியல் பிரவேசம் கண்டார். கடந்த 2001-ல் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது விஜயபாஸ்கருக்கு திருமணம் கூட ஆகவில்லை. இந்நிலையில் சசிகலாவின் மிக நெருங்கிய உறவினர் ஒருவரது மகளை இவர் திருமணம் செய்யபோவதாக பேசப்பட்டது. அப்போது வெளியான பிரபலமான தமிழ் வார இதழில் “விஜயபாஸ்கர் சென்னை வரும்போதெல்லாம் சிறிய சைஸ் சூட்கேஸ் ஒன்றை கையில் வைத்திருப்பார். அதில் காண்டம் ( ஆணுறை ) ஸடாக் எப்போதும் வைத்திருப்பார்” என எழுதினார்கள். இதனால் விஜயபாஸ்கருக்கு பேசப்பட்ட மேலிட சம்மந்தம் கை நழுவிபோனது.

மேலும் அந்த காலகட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி ரேங்கில் இருந்த காவல் பெண் அதிகாரி ஒருவரிடம் ( என்ன காரணத்துக்காகவோ ) கன்னத்தில் அறை வாங்கினார். பெண்கள் விசயத்தில் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால் 2006 தேர்தலில் போட்டியிட விஜயபாஸ்கருக்கு சீட் மறுக்கப்பட்டது. பின்னர் எப்படி எப்படியோ போராடி 2011 சட்டமன்ற தேர்தலில் சீட்டு வாங்கினார். அந்த தேர்தலில் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் . தொடர்ந்து இதே தொகுதியில் 2016, 2021, 2026 சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றார். 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தென்னலூர் பழனியப்பன் என்பவர் விஜயபாஸ்கருக்கு கடும் போட்டி கொடுத்தார். இதனை எதிர்கொள்ள முடியாத விஜயபாஸ்கர் கண்ணீர் விட்டு அழுது வீடியோ வெளியிட்டு அனுதாபத்தால் வெற்றிபெற்றார். அதிமுக அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தார். கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் இவர் மருத்துவதுறையில் அடித்த கொள்ளையை பற்றி எழுதினால் பக்கம் போதாது. டிசைன் டிசைனாக யோசித்து லஞ்சத்தின் மூலம் விஜயபாஸ்கர் சம்பாதித்தது கணக்கில் அடங்காத கோடிகள். குட்கா ஊழலில் இவரது பெயர், இவர் அமைச்சராக இருக்கும்போதே சேர்க்கப்பட்டது, அப்போதைய எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசுக்கு கரும்புள்ளியாக அமைந்தது என்றால் அது மிகையல்ல.

இப்படியாக அப்பழுக்கான அரசியல்வாதியாக வலம் வந்த விஜயபாஸ்கர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக எப்படியும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து விடும், தான் மீண்டும் அமைச்சராகி விடலாம் என்று கணக்கு போட்டார்.
ஆனால், மக்களின் அமோக ஆதரவுடன் ஜோசப்விஜய் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனார். இதனால் அமைச்சர் கனவில் இருந்த விஜயபாஸ்கருக்கு
பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. இதனால், தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டால் எப்படியும் மந்திரி பதவி கிடைத்துவிடும் என்று வேறு ஒரு கணக்கு போட்டார். இதனால், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது விஜய்க்கு ஆதரவாகவும் வாக்களித்தார். தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். அதோடு, தன்னை வாழ வைத்த அதிமுகவை தூக்கி எறிந்தார். எப்படியும் முதல்வர் விஜய்யை சந்தித்து தன்னை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்து கொண்டு விராலிமலை தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு பெற்று அமைச்சராகி விடலாம் என்ற கனவில் மிதந்தார். ஆனால், முதல்வர் விஜயோ, அவரை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. இதனால், திமுக பக்கம் செல்லலாமா என்றும் யோசித்தார். ஆனால், அங்கு நிலைமை சரியில்லை, மாவட்ட திமுக பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் எஸ்.ரகுபதி கொடுத்த பேட்டியில் விஜயபாஸ்கரை திமுகவில் சேர்த்துக் கொள்ளமாட்டோம் என்று ஓப்பனாக அறிவித்தார்.

இதனால் த.வெ.க.வில் இணைவதுதான் ‘பெஸ்ட்’ என முடிவு செய்தார். இதற்கான இணைப்பு விழா சென்னையில் இன்று(02-07-2026) நடைபெற்றது. முதல்வர் விஜய் தலைமையில் இணைய போகிறேன் என்று ஏகத்துக்கும் ‘பில்டப்’ கொடுத்த சி. விஜயபாஸ்கருக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. முதல்வர் விஜய் இந்த விழாவில் கடைசி வரை கலந்து கொள்ளவில்லை. இதனால் த.வெ.க.பொதுச் செயலாளர் என்.ஆனந்த் முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். ‘முதல் கோணல் முற்றிலும் கோணல்’ என்பது போல அவரது முதல் நிகழ்ச்சியே பெயிலியர் ஆக அமைந்து விட்டது. இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதால் அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவே தமிழக வெற்றி கழகத்தில் விஜயபாஸ்கர் இணைந்துள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ‘நமட்டு’ சிரிப்பு சிரிக்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க விஜயபாஸ்கர் இணைந்ததை தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் அவ்வளவாக விரும்பவில்லை. முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தில் பெரும் இளைஞர் பட்டாளம் உள்ளது, அவர்களை விஜயபாஸ்கர் எப்படி சமாளிக்க போகிறார் என்பது கேள்விக்குறியான விசயம் தான்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்