நீட் தேர்வை சிறப்பான முறையில் எழுத மாணவர்களுக்கு பயிற்சி…
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு..
கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை,
பால்வளத்துறை மற்றும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் இணைந்து திருவெறும்பூர், குண்டூரில் கால்நடை மருத்துவ முகாமினை நடத்தின. முகாமை பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் :
நீட் தேர்வை மாணவர்கள் சிறப்பான முறையில் எழுத தொடர்ந்து பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்திலுள்ள நாகமங்கலம் ஈச்சம்பட்டி பகுதியில் பள்ளிகளில் இடைநிற்றல்
அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அதனை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.முன்னதாக கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டிய நபர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.