Rock Fort Times
Online News

திருச்சி அட்லஸ் மருத்துவமனையில் மருத்துவர்கள் தின கொண்டாட்டம்…!

திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் அருகே வி.என். நகரில் அட்லஸ் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இம்மருத்துவமனையில், உலக தரத்தில் 24 மணி நேரமும் எலும்பு முறிவு ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, நுண்துளை ஆர்த்தோஸ்கோப்பி சிகிச்சைகள், மைக்ரோஸ்பைன் மற்றும் மூளை நரம்பியல் பிளாஸ்டிக் சர்ஜரி ஆகியவை செய்யப்பட்டு வருகிறது. இதன் நிறுவனரான டாக்டர் ஜெய்கீஷ் மற்றும் பொதுநல மருத்துவரான டாக்டர் கீதா ஜெய்கீஷ் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை ஒன்றாம் தேதி மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில், திருச்சி அட்லஸ் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், ஊழியர்கள் உள்ளிட்டவர்களுடன் இணைந்து மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.வருடத்தின் 365 நாட்களும் இரவு பகலென 24 மணி நேரமும் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு பல்லாயிரக்கணக்கானவர்களின் உயிர்காக்கும் உன்னத பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை ஊழியர்களுக்கும் இதன் நிறுவனர் டாக்டர் ஜெய்கீஷ் மற்றும் கீதா ஜெய்கீஷ் ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை அட்லஸ் மருத்துவமனை ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்