Rock Fort Times
Online News

திருச்சி கிழக்கு தொகுதியில் த.வெ.க தலைவர் விஜய்யை எதிர்த்து போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்…!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். திருச்சி கிழக்கு தொகுதியில்
விஜயை எதிர்த்து அதிமுக சார்பில் திருச்சி மாநகர் மாவட்ட பொருளாளர் கே.ராஜசேகரன் போட்டியிட்டார். இதில், விஜய் வெற்றி பெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜ் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். ராஜசேகரன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்த நிலையில், திருச்சி, மாநகர் மாவட்ட கழக பொருளாளர்  பொறுப்பு மற்றும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக ராஜசேகரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்டக் கழக பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து கனத்த இதயத்துடனும், கலங்கிய மனதுடனும் விலகிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்