தொழிலாளர்களின் பக்கம் தான் திமுக இருக்கும்- துரை வைகோவை ஆதரித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிரச்சாரம்…!
இந்தியா கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் தொண்டர்கள் புடைசூழ தீப்பெட்டி சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். தொடர்ந்து பொன்மலை ரெயில்வே பணிமனையின் ஆர்மரிகேட் பகுதியில் ரெயில்வே ஊழியர்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தார். தொடா்ந்து பெரியார், அம்பேத்கர், மகாத்மா காந்தி ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.
பின்னர்
பொன்மலை அடிவாரம், ஜீவாவீதி, கொட்டப்பட்டு, ஐஸ்வர்யா நகர், ரன்வே நகர், எம்.ஜி.ஆர்.நகர், பேன்சி நகர், பொன்மலைப்பட்டி, பொன்னேரிபுரம், திருமலைநகர், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, கம்பிகேட், மிலிட்டரி காலனி ஆகிய பகுதிகளில் துரை வைகோவுக்கு ஆதரவு திரட்டினார். பிரசாரத்தின்போது, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில்,
தி.மு.க. என்றும் தொழிலாளர்கள் பக்கம் தான் நிற்கும். அதுபோல் தமிழகத்தில் தொழிலாளர்களுக்கு பிரச்சினை என்றால் அங்கெல்லாம் வைகோ வந்து அவர்களுக்கு உறுதுணையாக இருப்பார். நெய்வேலியில் 30 ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்களில் ஒளிவிளக்கை ஏற்றியவர் வைகோதான். அந்த வகையில் அவருடைய மகன் துரைவைகோ தான் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். தொழிலாளர்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேட்பாளர் துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.
பிரசாரத்தில், திருச்சி கிழக்கு மாநகர திமுக செயலாளர் மு.மதிவாணன், இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ, மதிமுக துணை பொது செயலாளர் டாக்டர் ரொகையா, மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பூமிநாதன், மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் வெல்லமண்டி சோமு, தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் கழககுமார், மாநில மாணவர் அணி செயலாளர் பால.சசிகுமார், மாநில தொண்டர் அணி ஆலோசகர் ஆ.பாஸ்கரசேதுபதி, மாநில ஆபத்து உதவிகள் அணி செயலாளர் ரமேஷ்,
முன்னாள் ராணுவத்தினர் பிரிவு மாநில செயலாளர் கேப்டன் சுபாஷ் ராமன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்று ஆதரவு திரட்டினர்.
தொடர்ந்து திருச்சி கிழக்கு மாநகரம், கிழக்கு தொகுதிக்குட்பட்ட கமான் வளைவு, சந்து கடை, அந்தோணியார் கோவில் தெரு , அரியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று பிரச்சாரம் செய்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.