Rock Fort Times
Online News

திருச்சி அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதியின் தம்பி காரில் சிக்கிய பல லட்சம் பணம்! வருமான வரித்துறையினர் விசாரணை! ( படங்கள் )

 

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பரபரக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையமும் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்வது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் அரசியல் கட்சியினர் ஈடுபடுவதை தடுக்க, கண்கொத்தி பாம்பாக இரவு பகல் பாராது வாகன சோதனை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் ஈடுபட்டு வருகிறது.என்னதான் ஸ்ட்ரிக்ட் ஆஃபிசராக தேர்தல் ஆணையம் மற்றும் பறக்கும் படையினர் சோதனை செய்தாலும் அவர்களின் கண்ணில் மண்ணை தூவி, பக்காவாக ஸ்கெட்ச் போட்டு பணத்தை சேர்க்க வேண்டிய இடத்திற்கு கொண்டு போய் சேர்த்து விடுகின்றனர். அப்படி ஒரு சம்பவம்தான் இன்று திருச்சியில் அரங்கேறி உள்ளது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள எட்டரை பகுதியை சேர்ந்தவர் திவ்யா அன்பரசு. இவர் எட்டரை ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார் .இவருடைய கணவர் அன்பரசு. இவர் முன்னாள் அதிமுக அமைச்சரும், திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான பரஞ்ஜோதியின் தம்பி.இவர் இன்று மாலை தனது ஸ்கார்பியோ காரில் திருச்சியில் இருந்து எட்டரைக்கு வந்துள்ளார். அந்த காரில் டிராவல் பேக்கில் கட்டுக்கட்டாக பண பணம் இருப்பதாக திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி க்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதையறிந்த போலீஸ் சூப்பிரண்டு உடனடியாக சம்பவ இடத்திற்கு ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலச்சந்தர், இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் பறக்கும் படை அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து அன்பரசுவின் வீட்டிற்கு வந்து காரை சோதனை செய்த பறக்கும் படையினர், காரில் இருந்த டிராவல் பேக்கில் கட்டுகட்டாக பணம் இருப்பதை கண்டறிந்தனர். காரில் இருந்த பணம் 10 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என மதிப்பிட்ட அதிகாரிகள், உடனடியாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், பேக்கில் கத்தை கத்யாக இருந்த ஐறூறு ரூபாய் நோட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இதன் மதிப்பு சுமார் ஒரு கோடிக்கு மேல் பணம் இருக்கும் என கூறப்படுகிறது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், ஒரே நேரத்தில் இவ்வளவு பணத்தை எதற்காக வீட்டிற்கு கொண்டு வந்தார்கள். தேர்தல் நெருங்குவதால் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக கொண்டுவரப்பட்டதா? என்ற பல்வேறு கோணங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதற்கிடையில் அன்பரசு வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடப்பதை தெரிந்து கொண்ட கட்சியின் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் அன்பரசு வீட்டின் முன்பு கூடியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதிதாக கட்சி தொடங்கியவர் திமுக அழிய வேண்டும் என நினைக்கிறார்- விஜயை சாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 of 900

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்