நடிகர் தனுஷ் தனது மகன் என சட்ட போராட்டம் நடத்திய கதிரேசன் (79) உடல்நல குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் காலமானார்.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தங்களது மகன் என்று மேலூர் நீதிமன்றத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில் தனுஷ் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே வீட்டை விட்டு ஓடி விட்டதாகவும், அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என தெரிவித்திருந்தனர். மேலும், அவர் இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் வளர்ப்பு மகனாக இருந்து நடிகரானது பிறகே தெரிய வந்ததாகவும், நடிகர் தனுஷ் எங்களது மகன் என்ற முறையில் பொற்றோரான எங்களது பராமரிப்பு செலவிற்காக மாதாமாதம் உதவித்தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். பல ஆண்டுகளாக இந்த சட்டப்போராட்டம் தொடர்ந்தது. அந்த மனு மீது கடந்த மார்ச் 13 ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், தவறான உள்நோக்கத்தில் மனுதாரர்களான கதிரேசன் – மீனாட்சி தம்பதி இந்த மனுவை தாக்கல் செய்தது மட்டுமின்றி குற்றச்சாட்டுகளை நிரூபிக்க உரிய ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை என வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்தநிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கதிரேசன் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
1
of 927
Comments are closed, but trackbacks and pingbacks are open.