Rock Fort Times
Online News

நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் தவெகவில் ஐக்கியம்…!

விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் ஆட்சியைப் பிடித்தது.
இந்தத் தேர்தலிலும் அதிமுக தோல்வியை சந்தித்ததால் அந்த கட்சியின் தலைமை மீது அதிருப்தி அடைந்த 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேலும், அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள்,
முன்னாள் எம்பிக்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் பலரும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில் இன்றும் (ஜூன் 20) த.வெ.க. வில் பலர் இணைந்தனர். இதற்காக சென்னை, பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் மாற்று கட்சியினர் இணைப்பு விழா நடந்தது. அப்போது தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் முன்னிலையில் நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், முன்னாள் அமைச்சர் கோமதி உள்ளிட்டோர் தவெக வில் இணைந்தனர். இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “50 ஆண்டுகள் பழமைவாதியான செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கியது அதிமுக தலைமையின் தவறு. வந்தால் பதவி தருவோம் என கூறி வியாபாரம் செய்யும் கட்சி தவெக இல்லை. அதிமுகவும், திமுகவும் ஒன்று சேர்ந்துவிட்டனர். அதனால் தான் அதிமுகவினர் தவெகவில் இணைகின்றனர். அதிமுகவின் 90 சதவிகித தொண்டர்கள் தவெகவை நோக்கி வர ஆரம்பித்துவிட்டனர். அதிமுகவும், தவெகவும் எப்போதும் ஒன்றுதான். இரு கட்சிகளுக்கும் ஒரே கொள்கைதான்” என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்