Rock Fort Times
Online News

அதிமுகவில் நீடிப்பாரா? சி.விஜயபாஸ்கர் எடுக்கும் அடுத்த முடிவு என்ன..?

அதிமுகவில் சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை மறந்து, எடப்பாடி பழனிசாமியுடன் எஸ்.பி.வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் இணைந்துள்ளனர். எனினும், எஸ்.பி.வேலுமணி அணியில் இருந்த சி.வி.சண்முகம் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேற்று(27.05.2026) எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை. அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சி.விஜயபாஸ்கர் தனது சொந்த ஊரில் ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுகவில் தொடர்வதா, அல்லது தவெகவில் இணையவா, இல்லையெனில் அமைதியாக எம்.எல்.ஏ. பணியை மட்டும் தொடர்வதா என்பது குறித்து அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலுப்பையூரில் உள்ள விஜயபாஸ்கர் இல்லத்திற்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளனர். ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, தனது அடுத்த கட்ட முடிவை சி.விஜயபாஸ்கர் நாளை அறிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்