அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற நிலை மாறி இன்று அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகிறார்கள். கல்வியில், பொருளாதாரத்தில், மருத்துவத்தில், அரசியலில் என அனைத்து துறைகளிலும் பெண்கள் பல்வேறு சாதனைகள் படைத்து வருகிறார்கள். அதேபோல, ஆண்களுக்கு நிகராக ஆட்டோ ஓட்டுவது, பஸ், கார் ஓட்டுவது, ரயிலை இயக்குவது, ராக்கெட்டில் பறப்பது வரை அவர்களது சாதனை பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
அவ்வாறு சாதனை படைக்கும் பெண்களை கவுரவிக்கும் வகையிலும், பெண்களை போற்றும் வகையிலும் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8ம் தேதி மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் உலகம் முழுவதும் நேற்று மகளிர் தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.சாதனை படைத்த பல்வேறு பெண்கள் கௌரவிக்கப்பட்டனர். அதேபோல, திருச்சி-திண்டுக்கல் சாலையில் தீரன் நகரில் உள்ள திருச்சி ஆக்சினா ஹூண்டாய் நிறுவனத்தில் உலக மகளிர் தின விழா நேற்று(08-03-2024) உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி சுப்பிரமணியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் அமுதா மற்றும் சென்னை ஐ.ஆர்.எம்.எனர்ஜி லிமிடெட் துணை மேலாளர் அஜிலியா ஆகியோர் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர். விழாவை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டு அங்கு பணிபுரியும் பெண் ஊழியர்கள் கவுரவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.