தமிழகத்தில் மே நான்காம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கி வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை திருச்சி, தஞ்சை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, திருச்சியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இன்று (மே 9) காலை 10 மணி அளவில் லேசாக மழை பெய்ய தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. வழக்கமாக கோடை வெயிலையே மக்களால் சமாளிக்க முடியாது.அதுவும் அக்னி நட்சத்திர நாட்களில் வெயில் கோரத்தாண்டவம் ஆடும். இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.குறிப்பாக உணவு டெலிவரி செய்பவர்கள், அன்றாட வேலைக்கு செல்பவர்கள் கடும் பாதிப்பை சந்திப்பார்கள். இந்தநிலையில் அக்னி நட்சத்திர நாட்களில் மழை பெய்து வருவது பொதுமக்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்திருக்கிறது. மழையின் காரணமாக திருச்சியில் பூமி குளிர்ந்து குளிர்ச்சி நிலவுகிறது.

Comments are closed.