Rock Fort Times
Online News

திருச்சியில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிட்கோ கிளை மேலாளர் கைது…! 

திருச்சி, அண்ணாநகரில் வசித்து வரும் முரளி என்பவர் தனது தாயார் கலா பெயரில் சத்து மாவு தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகின்றார். மேற்கண்ட நிறுவனத்திற்கு டான்சிட்கோ மூலம் திருச்சி துவாக்குடியில் உள்ள டான்சிட்கோ இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்க்கு சொந்தமான இடத்தில் பிளாட் எண்.3 என்ற இடத்திற்கு பிளாட் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்திற்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்க ரூ.20 ஆயிரத்தை திருச்சி டான் சிட்கோ கிளை மேலாளர் சத்தியராஜ் என்பவர் லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பாத முரளி, திருச்சி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் பாலமுருகன் மற்றும் காவலர்கள் இரசாயனப் பொடி தடவிய நோட்டுகளை புகார்தாரர் முரளியை திருச்சி டான்சிட்கோ நிறுவன கிளை மேலாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். அப்போது திருச்சி டான்சிட்கோ நிறுவன கிளை மேலாளர் சத்தியராஜ், (வயது 51) புகார்தாரரிடம் இருந்து பொடி தடவப்பட்ட லஞ்சப் பணம் ரூ.20,000 ஐ கேட்டு பெற்ற போது கையும் களவுமாக பிடிபட்டார். இதனை தொடர்ந்து அவரிடம் அவரது அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்