Rock Fort Times
Online News

திமுக கூட்டணியில் கமலஹாசன் கட்சிக்கு சீட் இல்லை- ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு…!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு தமிழகத்தில் திமுக, அதிமுக, பாரதிய ஜனதா கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதில் திமுக கிட்டத்தட்ட கூட்டணியை இறுதி செய்யும் நிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் மட்டுமே தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் இன்று(09-03-2024) சந்தித்து பேசினர். அப்போது மக்கள் நீதி மையம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி பார்த்தால் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையத்திற்கு தொகுதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. மாநிலங்களவையில் ஒரு இடம் ஒதுக்க முடிவானது. இதனை கமலஹாசனும் ஏற்றுக் கொண்டார். அதன்பிறகு கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலில் நானும் எனது கட்சியும் போட்டியிடவில்லை.திமுக கூட்டணிக்கு என்னுடைய அனைத்து ஒத்துழைப்பும் இருக்கும். பதவிக்காக விஷயம் இல்லை.நாட்டிற்காக சேர்ந்துள்ளோம். நான் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்று தெரிவித்தார்.

யார் இந்த தேவதை ! ரசிகரின் குழந்தைக்கு பெயர் வைத்த சிவகார்த்திகேயன்..

1 of 841

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்