நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைப்பதற்கு போதுமானதாக இல்லை. இதனால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவை கோரியது. அதனைத் தொடர்ந்து 5 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ், 2 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட், 2 உறுப்பினர்களைக் கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை தங்களது ஆதரவை தெரிவித்தன. இதனால், தமிழக வெற்றி கழகத்தின் பலம் 116 ஆக அதிகரித்தது. இதனால், ஆட்சி அமைக்க தன்னை அழைக்குமாறு விஜய் தமிழக ஆளுநரை சந்தித்தும் அவர் போதிய மெஜாரிட்டி இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறினார். ஆளுநரின் இந்த செயலை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்லப் பெருந்தகை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தநிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செல்வப்பெருந்தகை, ஜோடங்கர் உள்ளிட்ட 250 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Comments are closed.