நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய்க்கு, 5 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ், 2 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட், 2 உறுப்பினர்கள்
கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், 2 உறுப்பினர்களைக் கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி, 2 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு தெரிவித்தன. இதன்மூலம் தமிழக வெற்றி கழகத்தின் பலம் 120 ஆக அதிகரித்து விஜய் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.
மு. க. ஸ்டாலின் வாழ்த்து,
இந்தநிலையில் விஜய் தலைமையில் அமைய உள்ள புதிய அரசாங்கத்திற்கு முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான
மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்று நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை, தோழமைக் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களின் முடிவை மதித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்து விடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது. எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள
பதிவில், நடந்து முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
என தெரிவித்துள்ளார்.

Comments are closed.