Rock Fort Times
Online News

10 ஆண்டு காலம் ஆட்சி செய்த பாஜக கச்சத்தீவு விவகாரத்தை ஏன் கையில் எடுக்கவில்லை- காங்.செய்தி தொடர்பாளர் கேள்வி…!

திருச்சி தெப்பக்குளம் பகுதியில் உள்ள திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், மண்டல பொருப்பாளருமான இப்ராஹீம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், காங்கிரஸ் கட்சியின் பணம் திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கில் இருந்து 135 கோடி ரூபாய் சட்ட விரோதமாக அபகரித்துள்ளனர். இது முற்றிலும் பாஜகவின் பலி வாங்கும் செயல். இதே காலகட்டத்தில் 42 கோடி ரூபாய் வசூலித்த பாஜகவிற்கு எந்த ஒரு வரி விதிப்பும், அபராதமும் இல்லை. ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள போர் இது. இந்தியா கூட்டணியின் வலிமையை குழைக்க பார்க்கின்றனர். இது போன்ற விவகாரங்களில் ஜெர்மனி இந்தியாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.நா கேள்வி கேட்கிறது. ஆனால், பா.ஜ.க பதில் கூற மறுக்கிறது. கச்சத்தீவு பற்றி கவலை பட்டு பேசும் மோடி, லடாக்கில் 4 ஆயிரம் சதுர மீட்டர் நம் இடம் பறி போய் உள்ளதே இதை பற்றி ஏன் பேசுவதில்லை. கச்சத்தீவு விவகாரத்தில் பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்தபோது எதையும் செய்யாமல் தற்போது தேர்தல் நேரத்தில் கையில் எடுத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. இந்த விவகாரத்தில் ஆர்.டி.ஐ. பைல் செய்த போது அண்ணாமலைக்கு கச்சத்தீவு விவகாரத்தில் ஆர்.டி.ஐ.எப்படி கிடைத்தது?. இது முற்றிலும் விதி மீறிய செயல். கச்சத்தீவு விவகாரத்தை வைத்து பா.ஜ.க தமிழகத்தில் அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறது. ஓட்டு வங்கிக்காக சமயம் பார்த்து பா.ஜ.க கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. காங்கிரஸ் அரசு அமைந்ததும் இந்த விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும். கெஜ்ரிவால் கைது மிக பெரிய அரசியல் காழ்ப்புணர்ச்சி. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ரிசர்வேஷன் வாயிலாக, தான் பலன் அடைந்ததாக கூறி பின்னர் ரிசர்வேஷனுக்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை என பேசி இருக்கும் ஆதாரம் என்னிடத்தில் உள்ளது என கூறி அதனை பத்திரிகையாளர்கள் மத்தியில் காண்பித்தார்.
பேட்டியின்போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

work from home job போல அரசியல் ! நடிகர் விஜய்யை விமர்சனம் செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

1 of 940

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்