தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நாளை( நவம்பர் 8) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது;- “மங்களகரமான தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் ஒளியால் ஜொலிக்கிறது. இந்த தீப ஒளித் திருவிழா, இருளுக்கு எதிரான நமது உறுதியின் பிரதிபலிப்பாகும். நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள். இந்த பண்டிகையும், வரவிருக்கும் காலமும் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பை கொண்டு வரட்டும். நானும் திபாவளியை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறேன். வீரமிக்க ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது எனது வழக்கம். அது இந்த முறையும் தொடரும். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.