தீபாவளியை முன்னிட்டு திருச்சியில் உள்ள ‘மனிதம்’ மூதின் குடிலில் வசிக்கும் முதியோர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி..!
திருச்சி- திண்டுக்கல் சாலை, நவலூர் குட்டப்பட்டில் அமைந்துள்ள ‘மனிதம்’ மூதின் குடிலில் வசிக்கும் முதியோர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர்களாக நவலூர் குட்டப்பட்டு முன்னாள் ஊராட்சித் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் ராம்ஜி நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு முதியோர்களுக்கு புத்தாடைகளை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் குழந்தைகள், முதியோர்கள் மற்றும் பெண்களின் உரிமைகள், நலன்களுக்காகத் தொடர்ந்து சமூகப் பணியாற்றி வரும் மனிதம் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் இயக்குநர் தினேஷ்குமார் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Comments are closed.