‘முரசு’ புயலில் சிக்கி உயிர் இழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், ”ஆளும் தவெக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலேயே இந்த துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
புயல் வரும் சமயத்தில் மீனவர்களைக் கடலுக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது. கடந்த திமுக ஆட்சியின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கப்பட்டது. ஆனால், இந்த தவெக அரசு மீனவர்கள் மீது எந்தவித அக்கறையும்
எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பெரியார் நூலக முறைகேடு குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த உதயநிதி , ” பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பாக முறையான விசாரணைக்கு நாங்கள் தயார். திமுக ஆட்சியில் முறைகேடு நடைபெறவில்லை என்பதில் 100% உறுதியாக இருக்கிறேன். புத்தக ஆசிரியர்களின் பெயர்களை வைத்தே எந்த ஆட்சியில் ஊழல் நடந்தது எனத் தெரியும்” என்று தெரிவித்தார்.

Comments are closed.