பரபரப்பான திருச்சி, கோட்டை நுழைவு வாயிலில் மின்விளக்கு வசதி இல்லாததால் இருட்டில் தவிக்கும் பொது மக்கள்…!
திருச்சி மாவட்டத்தின் இதயம் போன்ற பகுதி மலைக்கோட்டை என்.எஸ்.பி.சாலை. இந்தப் பகுதியில் தான் பிரபல ஜவுளி நிறுவனங்கள், நகைக்கடைகள், பர்னிச்சர் கடைகள், பாத்திர கடைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் அமைந்துள்ளன. இந்த பகுதிக்கு திருச்சி மட்டுமின்றி அருகில் உள்ள அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வருகை தந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால் இந்த பகுதியில் எப்போதும் கூட்டம் அதிகரித்து காணப்படும். தற்போது தீபாவளி பண்டிகை என்பதால் கட்டுக்கடங்காத கூட்டம் கூடி வருகிறது.
இங்கு வருபவர்கள் முன்புறமுள்ள கோட்டை வாயிலை கடந்து தான் என்.எஸ்.பி. சாலையை அடைய வேண்டும். இந்த கோட்டை கதவு அமைந்துள்ள பகுதியில் சமீப நாட்களாக மின்விளக்கு வசதி இல்லாததால் மாலை நேரங்களில் பொதுமக்கள் இருட்டுக்குள் நுழைந்து தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால்,
அவர்கள் ஒருவித பயத்துடனேயே சென்று வருகின்றனர். ஆகவே, இந்த இடத்தில் மின்விளக்கு
வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.