Rock Fort Times
Online News

இல்லங்கள் தோறும் ஆனந்தம் பெருகும் நாளாக அமையட்டும்…* முதலமைச்சர் விஜய் தீபாவளி வாழ்த்து…!

தீபாவளிப் பண்டிகை நாளை (நவம்பர் 8) கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு தமிழக மக்களுக்கு. வீடியோ வெளியிட்டு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில் அவர், “மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில். அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம். இல்லங்கள்
தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்! என்று
தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்