Rock Fort Times
Online News

கோவை அறிவுலகத்தில் சர்ச்சைக்குரிய நூல்கள் அகற்றம்…!

கோயம்புத்தூர் மாவட்டம், காந்திபுரத்தில் கடந்த மாதம் 16-ம் தேதி ‘பெரியார் அறிவுலகம்’ என்ற நூலகத்தை முதல்- அமைச்சர் விஜய் திறந்து வைத்தார். இந்த நூலகம் திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும். இந்த நூலகத்தின் 1-வது தளத்தில் உள்ள தமிழ் நூல்கள் பிரிவில், அகல்விளக்கு பதிப்பகம்’ வெளியிட்ட சுமார் 1,800-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் கொன்முதல் செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக அண்மையில் சர்ச்சை எழுந்தது. அந்தப் புத்தகங்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் தரமற்ற முறையில் உருவாக்கப்பட்டிருந்ததையும், அவற்றில் தவறான வரலாற்றுத் தகவல்கள் இருப்பதையும் எழுத்தாளர் பெருமாள் முருகன் என்பவர் கண்டறிந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, நூல்கள் கொள்முதல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இன்று (நவம்பர் 7) நூலகத்தின் 4-வது தள அலமாரிகளில் வைக்கப்பட்டிருந்த அகல்விளக்கு பதிப்பகங்களின் சுமார் 2,000 புத்தகங்களை அதிகாரிகள் மொத்தமாக அப்புறப்படுத்தியுள்ளனர். பீனிக்ஸ் பதிப்பக புத்தகங்களும் அகற்றப்பட்டன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்