திருச்சி தீரன் நகரை சேர்ந்தவர் நாகராஜன். மத்திய ரயில்வே பாதுகாப்பு படையில் பணியாற்றிய இவர், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், தனக்கு சொந்தமான காலிமனைக்கு வரி நிர்ணயம் செய்ய சுப்பிரமணியபுரத்தில் உள்ள வரி வசூல் மைய பில் கலெக்டர் ராஜலிங்கத்தை அணுகினேன். அதற்கு அவர், காலிமனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ.5000 லஞ்சம் கேட்கிறார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுத்து அதனை ராஜலிங்கத்திடம் கொடுக்க ஆலோசனை கூறினர். அதன்பேரில், அவர் அந்த பணத்தை ராஜலிங்கத்திடம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசாா் அவரை கைது செய்தனர். மேலும், அவரது இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது , அதில் ரூ.25000 இருந்தது. அந்தப் பணம் குறித்து கேட்டதற்கு அவர் சரியான பதில் அளிக்கவில்லை. அதன்பேரில் அந்த பணத்தை கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாகவும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.