தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், “மதுரை வைகை ஆற்றைப் பார்த்தேன். ஆறு உள்ளது, நீர் எங்கே? என்று பேசியதோடு வைகை ஆற்றை யாரும் சீரமைக்காவிட்டால், ஆளுநர் மாளிகையே களமிறங்கும்” என்று பேசி உள்ளார். மேலும், மதுரை மாவட்ட கலெக்டர், காவல்துறை ஆணையர், மதுரை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தையும் நடத்தியுள்ளார். ஆளுநர் இவ்வாறு நடந்து கொள்வது தமிழக நிர்வாகத்தில் தலையிடும் செயலாகும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில்,
வைகை ஆற்றைச் சீரமைக்க ஆளுநர் மாளிகை களம் இறங்கும் என்று அவர் கருத்து தெரிவித்திருந்தார். அதோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையரை அழைத்து அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தது “அத்துமீறிய செயல்”. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக, ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவதும், அரசியலமைப்புச் சட்டத்தின் வரையறைகளை மீறுவதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆளுநர் இதுபோன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்தால், அவருக்கு எதிராகப் போராட்டங்களைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமைச்சர் வன்னியரசு,
சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரையில் நிகழ்வு ஒன்றில் பேசிய தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், “மதுரை வைகை ஆற்றைப் பார்த்தேன். ஆறு உள்ளது, நீர் எங்கே? துப்பாக்கி எடுத்து போருக்குச் செல்வது மட்டுமல்ல, நதிகளை மீட்பதும் தேசப்பற்றுதான். வைகையை மீட்க இளைஞர்கள் முன்வர வேண்டும். வைகை ஆற்றை யாரும் சீரமைக்காவிட்டால், ஆளுநர் மாளிகையே களமிறங்கும்” என்று பேசியுள்ளார். அதனை தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தையும் நடத்தியுள்ளார் பொறுப்பு ஆளுநர் பொறுப்புடன் இருக்க வேண்டாமா? என்று தமிழ்நாட்டு மக்கள் கேள்வி எழுப்பும்படி அவரது செயல்பாடுகள் அமைந்துள்ளன. அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் பொறுப்பு கொண்ட பொறுப்பு ஆளுநர் இது குறித்து வாய் திறப்பாரா? என்று தெரிவித்துள்ளார். இதேபோல
தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Comments are closed.