Rock Fort Times
Online News

தொடக்க கல்வி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வருகிற 29, 30, 31 தேதிகளில் போராட்டம்- திருச்சியில் நடந்த கூட்டத்தில் முடிவு…!

தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குமு உயர்மட்டக் குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மயில் தலைமை தாங்கி பேசுகையில், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பிரச்சனையாக உள்ள 243-வது அரசாணையை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும். பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கும் செயலை கண்டிப்பது என்பன உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 29, 30, 31 ஆகிய 3 நாட்கள் சென்னையில் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளோம். இதுதொடர்பாக தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் ஆயத்த கூட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், நிர்வாகிகள் வின்சென்ட் பால்ராஜ், தாஸ், முத்துராமசாமி, சண்முகநாதன், அண்ணாதுரை, திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி பொன்மலை ஜி கார்னர் ரயில்வே பாலத்தில் மீண்டும் விரிசல் வாகன ஓட்டிகள் அச்சம்

1 of 840

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்