Rock Fort Times
Online News

என்னை 100% நம்பலாம்; பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்ற மாட்டேன்…* திருப்பூரில் விஜய் ஆணித்தரமான பேச்சு!

தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு வருகிற 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் இன்று(14-04-2026) திருப்பூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் சில தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

  • நெசவாளர்களின் தயாரிப்புகளை நேரடியாக சர்வதேச சந்தைகளில் விற்க அரசு சார்பில் இ காமர்ஸ் பிராண்ட் உருவாக்கப்படும்.
  • நிலையற்ற நூல் விலை, மின்சார நெருக்கடியை பகிர்ந்துகொள்ள, கைத்தறி, விசைத்தறி வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ30 ஆயிரம் வழங்கப்படும்.
  • கைத்தறிகளுக்கு இலவச மின்சாரம் 500 யூனிட்டாகவும், விசைத்தறிகளுக்கு 1,500 யூனிட்டாகவும் வழங்கப்படும்.
  • நெசவாளர்களின் உற்பத்தி செலவுகளை குறைக்க நூல், சாயங்களுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும்.
  • அனைத்து நெசவாளர்களுக்கும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு செய்யப்படும்.
  • நெசவாளர்களின் முதியோர் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் ஆக உயர்த்தப்படும்.
  • சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் பீக் அவர்ஸ் மின் கட்டணத்தை தவெக நிறுத்தி வைக்கும்.
  • சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு 100 சதவீத மின்சார வரி விலக்கு அளிக்கப்படும்.
  • 5 ஏக்கருக்கு குறைவான விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
  • 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளின் பயிர்க்கடன் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும். நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.3.500, கரும்பு டன் ரூ4,500 ஆக உயர்த்தப்படும்.
  • அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பரிசீலிக்கப்படும்.
  • 5 ஆண்டுக்கு மேல் பணியாற்றிய தற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்.
  • பதவி உயர்வுக்கு பணம் பெறும் கலாச்சாரம் முடிவுக்கு கொண்டு வரப்படும்.
  • காவலர்களின் மாத ஊதியம் ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும்.
  • காவலர்களின் பணி நேரங்கள் ஒழுங்குபடுத்தப்படும். மேலும் பல்வேறு வாக்குறுதிகள் அளித்தார்.

நீங்கள் எல்லோரும் விஜய்யை 100 சதவீதம் நம்பலாம். நான் உங்களுக்காக மட்டுமே வந்துள்ளேன். பொய் வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்ற மாட்டேன். உங்க அண்ணணுக்கு, உங்க தம்பிக்கு, உங்க மகனுக்கு, உங்க பிள்ளைக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள். இது ஒரு விசில் புரட்சி தேர்தலாக இருக்க வேண்டும். நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்.” இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்