காமராஜர் பிறந்த நாள் விழாவில் திரளாக பங்கேற்க கட்சியினருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு…!
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், காமராஜர் 121-வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை (15-07-2024) காலை 7 மணிக்கு திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு எனது தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. விழாவில் தெற்கு மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்ட, கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, மாநகர அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.