Rock Fort Times
Online News

தொகுதி மறுவரையறை: திமுக எம்.பி.க்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை…!

அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன. இந்த நோக்கில் அரசியலமைப்பு சட்டம் 131-வது திருத்த மசோதா-2026 தொகுதிகள் மறுவரையறை மசோதா-2026 மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டங்கள் திருத்த மசோதா-2026 ஆகிய 3 மசோதாக்களை மத்திய அரசு முன் மொழிந்து உள்ளது. இந்த மசோதாக்கள் நாளை (16-04-2026) கூட உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன. இதையொட்டி நேற்று இந்த மசோதாக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்து உள்ளனர். இந்தநிலையில், தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு சந்திக்கவுள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று( ஏப்.15) காலை 11 மணிக்கு திமுக எம்.பி.க்கள் அவசரக் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறையை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக முக்கிய அறிவுறுத்தல்களை மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.
*

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்