Rock Fort Times
Online News

திருப்பூரில் விஜய் பங்கேற்ற த.வெ.க.கூட்டத்தில் வேட்பாளர் உட்பட 9 பேர் மயக்கம்…!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு. அவினாசி, பல்லடம், காங்கேயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் த.வெ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து விஜய் இன்று(ஏப்ரல் 14 )மாலை திருப்பூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக சென்னையில் இருந்து இன்று விமானம் மூலம் கோவைக்கு வந்த விஜய், பின்னர் அங்கிருந்து கார் மூலம் அவினாசி சென்றார். அதன்பிறகு பிற்பகல் 3 மணியளவில் ஆட்டையாம்பாளையம் பிரிவில் இருந்து பிரசார வாகனத்தில் சென்று அவினாசி பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் பகுதியில் ரோடு ஷோ சென்று வேனில் நின்றபடி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். பின்னர் அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக பெருமாநல்லூர் நால்ரோடு சென்று அங்கு பிரச்சாரம் செய்தார். இதைத்தொடர்ந்து பூலுவப்பட்டி வரை ரோடு ஷோ நடத்தி ஆதரவு திரட்டினார். இந்தநிலையில், விஜய்யின் வருகைக்காக பெருமாநல்லூரில் காத்திருந்த த.வெ.க. வேட்பாளருக்கு மயக்கம் ஏற்பட்டது. அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து குடிநீர், ஓ.ஆர்.எஸ். வழங்கினர். அவர் தவிர 7 பெண்கள் உள்பட 9 பேர் அடுத்தடுத்து மயக்கம் அடைந்தனர். நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்ததால் அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்