திருச்சி கோட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ரெயில்களின் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி, செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:16848) வருகிற 16-ந்தேதி முதல் 21-ந்தேதி வரையிலும், மும்பை சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16352) வருகிற 16 மற்றும் 19-ந் தேதிகளிலும், கன்னியாகுமரி ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 12666) வருகிற 18-ந்தேதியிலும், கன்னியாகுமரி- ஐதராபாத் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 17070) வருகிற 17-ந்தேதியிலும் மதுரை, மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி வந்து செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல, குருவாயூர்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:16128) வருகிற 15-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையும்,
எர்ணாகுளம்- வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16363) வருகிற 15-ந்தேதியிலும் மதுரை சந்திப்பை தவிர்த்து விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி வந்து செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேற்கண்ட தகவலை திருச்சி ரெயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்து ள்ளார்.

Comments are closed.